பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

bakthi kataikal

சிறந்த கொடையாளி!

ஒருமுறை பாண்டவர்கள் சுற்றி அமர்ந்து இருக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நடுவில் அமர்ந்திருந்தார் .
அப்போது அர்ஜுனன் கண்ணனை பார்த்து "கிருஷ்ணா இந்த உலகிலேயே மிகச்சிறந்த கொடையாளி யார் " என்று கேட்டான் .உடனே கண்ணன் "அர்ஜுனா! உண்மையை சொன்னால் கர்ணனை விட சிறந்த கொடையாளி யாரும் கிடையாது "என்றார் .உடனே அர்ஜுனன் கோபமாக "கண்ணா ! நானும் என் சகோதரர்களும் நிறைய தான தர்மங்கள் செய்திருக்கிறோம் அப்படி இருக்க கர்ணன் மட்டும் என்ன பெரிதாக செய்து விட்டான் " என்றான் .உடனே கண்ணன் சிரித்துக்கொண்டே "அர்ஜுனா இப்போது உனக்கு ஒரு தங்க மலையும்,ஒரு வெள்ளி மலையும் கொடுக்கிறேன் இன்று காலையிலிருந்து மாலை சூரியன் மறைவதற்குள் முடிந்தால் முழுவதையும் தானம் செய்துவிடு" என்றார் .உடனே கண்ணன் இரண்டு மலைகளையும் உருவாக்கினார் . பின்பு அர்ஜுனனை பார்த்து "உன் தானத்தை ஆரம்பி " என்றார் . அர்ஜுனன் ஒரு கோடரியை வைத்து மலைகளை வெட்டி தானம் செய்ய ஆரம்பித்தான் .மாலை வரை அவன் வெட்ட வெட்ட மலைகள் வளர்ந்து கொண்டே இருந்தன .மாலையில் கண்ணன் வந்து அர்ஜுனனை பார்த்து சிரித்துக்கொண்டே "என்ன அர்ஜுனா இன்று மாலை வரை எவ்வளவு தானம் செய்தாய் " என்று கேட்டான் . அதற்கு அர்ஜுனன் "கண்ணா அந்த கர்ணன் கூட என் அளவிற்கு தானம் செய்ய முடியாது அந்த அளவிற்கு தானம் செய்துவிட்டேன் என்றான் .உடனே கண்ணன் கர்ணனை வரவழைத்து அதே போல் இரண்டு மலைகளை உருவாக்கினான் .பின்பு கர்ணனை பார்த்து "கர்ணா !இந்த தங்க மலையும் வெள்ளி மலையும் உனக்கு கொடுக்கிறேன் இதனை இன்று மாலைக்குள் தானம் செய்துவிடு "என்றான் .உடனே கர்ணன் அந்தவழியாக வந்த இருவரை அழைத்து ஒருவருக்கு தங்க மலையையும் ,ஒருவருக்கு வெள்ளி மலையையும் தானம் செய்தான் .உடனே கண்ணன் அர்ஜுனனை பார்த்து "பார்த்திபா பார்த்தாயா உனக்கு நான் இலவசமாக கொடுத்து தானம் செய்ய சொன்னேன் ஆனாலும் உனக்கு அந்த மலையை முழுவதுமாய் கொடுக்க மனம் இல்லை . அதனை வெட்டி சிறு சிறு துண்டுகளாக கொடுத்தாய்
ஆனால் கர்ணனை பார்த்தாயா அதனால் தான் கர்ணன் சிறந்த கொடையாளி என்று கூறினேன் " என்றார் .அர்ஜுனனும் அதனை ஆமோதித்தான் .