இனியவளே !
உன் மேனி மலர்போல் இருக்கலாம் ..!
ஆனால்....!
மலரென்று வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ நந்தவனத்து சொந்தமாகிவிடுவாய் ..!
உன் குரல் தேன்போலே இனிக்கலாம் ....
ஆனால்....!
தேன் என்று வர்ணிக்கமட்டேன்!
ஏனெனில் ...
நீ தேனீக்களுக்கு சொந்தமாகிவிடுவாய் ...!
உன் முகம் முழுமதி போலே இருக்கலாம் !
ஆனால் ...!
நிலவென்று வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ ஆகாயத்திற்கு சொந்தமாகிவிடுவாய் ..!
உன் இதழ்கள் கனிந்த கோவைபோலே இருக்கலாம் !
ஆனால் ...!
கோவைப்பழம் என்று வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ கொடிகளுக்கு சொந்தமாகி விடுவாய் ..!
உன் பற்கள் முத்துப்போலே பிரகாசிக்கலாம் !
ஆனால் ...!
முத்துஎன்று வர்ணிக்க மாட்டேன் !
ஏனெனில் ...
நீ கடலுக்கு சொந்தமாகிவிடுவாய் ..!
இப்படி இருக்கும் போது....
உன்னை எப்படி வர்ணிப்பேன் கண்ணே !?
ஆம் .....!
உன்னை "நான்" என்றுதான் வர்ணிக்கவேண்டும் !
ஏனெனில் ....
நீ எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் !!!
நிச்சயமாக ...!!!!!