விகடகவி
தென்னாலிராமனின் பால்ய வயதில் மிகவும் வறுமையில் வாடினான் . ஒருமுறை பசி மயக்கத்தில் அருகில் உள்ள காளி கோவிலில் உறங்கிவிட்டான் . நள்ளிரவு வேளையில் காளிதேவி மிக பயங்கரமான தோற்றத்தில் காட்சியளித்தாள்.அப்போது திடீரென விழித்த தென்னாலி காளிதேவி பத்து தலையுடன் பயங்கரமாக தன் அருகில் நிற்பதை கண்டான் .உடனே காளிதேவியின் முன்னால் சென்று மேலும் கீழும் பார்த்தான் . உடனே விழுந்து விழுந்து சிரித்தான் .உடனே காளிதேவி கோபத்துடன் "ராமா எதற்காக இப்படி சிரிக்கிறாய் " என்று கேட்டாள். அதற்க்கு ராமன் தாயே எனக்கு ஒரு தலை மட்டும் தான் உள்ளது .ஆனால் எனக்கு ஜலதோஷம் பிடித்தால் என் இரண்டு கைகளும் போதவில்லை அதனை துடைக்க ,அதுபோல் உனக்கு ஜலதோஷம் பிடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன் அதனால் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது என்றான் . உடனே தேவியும் சிரித்துவிட்டாள் . உடனே "ராமா நீ விகடகவி என்ற பெயருடன் சிறப்போடு வாழ்வாய்" என்று ஆசி கூறி மறைந்தாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக