முல்லா கதைகள்
ஒரு முறை முல்லா மற்றும் அவர் மனைவி ஒரு கப்பலில் பயணம் செய்தனர் . நடுக்கடலில் பயணம் செய்த பொது பெரும் புயலால் கப்பல் தத்தளித்தது. அதில் பயணம் செய்த அனைவரும் உயிர் பயத்தால் அலற ஆரம்பித்தனர். முல்லாவின் மனைவியோ பயத்தில் முல்லாவை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். அனால் முல்லவோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனைவியை நோக்கி " என் அன்பு மனைவியே ! கலங்காதே! எதுவும் பெரிதாக நடந்துவிடாது " என்று அமைதியாக கூறினார். அதற்கு அவர் மனைவி " உங்களுக்கு உயிர் பயம் இல்லையா " என்று கேட்டாள். உடனே முல்லா ஒரு கத்தியை எடுத்து மனைவியின் கழுத்து அருகே கொண்டு சென்றார். ஆனால் அவர் மனைவியோ அவரைப்பார்த்து எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தாள். அப்போது முல்லா தன் மனைவியை பார்த்து " இப்போது என் கையில் உள்ள கத்தி மிகப் பயங்கரமானது அது உன் கழுத்தை வெட்டும் நிலையில் உள்ளது உனக்கு பயமாக இல்லையா! " என்றார். அதற்கு அவர் மனைவி " இந்தக் கத்தி பயங்கரமானதாக இருக்கலாம் ஆனால் அது என் அன்பு கணவரின் கையில் அல்லவா உள்ளது பிறகு நான் ஏன் பயப்படவேண்டும்" என்றாள். முல்லாவும் சிரித்துக்கொண்டே " இப்போது வீசும் புயலும் பொங்கும் அலைகளும் பயங்கரமானதாக இருக்கலாம் ஆனால் அதனை இயக்கும் நம் அல்லாஹ் கரங்கள் அன்பு மயமானது ஆகவே எனக்கு பயம் இல்லை " என்று அமைதியாக கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக