பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

who is best?

யார் பெரியவர்!

இரண்டு நண்பர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் தங்கி ஒரே அலுவலகத்தில் வேலை செய்தனர். அதில் ஒருவன் மிகச் சிறந்த பக்திமான். மற்றவன் ஒரு நாத்திகன். இருவரும் அதிகாலையில் எழுந்து விடுவர். முதலாமவன் காலையில் எழுந்தவுடன் குளித்து விட்டு தன்னிடமுள்ள விநாயகர் சிலைக்கு அபிசேகம் செய்து மாலையிட்டு வணங்குவான். நாத்திகனோ காலையில் தன்னுடைய வளர்ப்பு நாயை அழைத்துக்கொண்டு கடற்கரையில் உடற்பயிற்சி செய்வான். பிறகு இருவரும் ஒன்றாக அலுவலகம் செல்வார்கள். ஒரு நாள் நாத்திகன் தன் நண்பனை விளையாட்டாக வம்புக்கு இழுத்தான். அவன் நண்பனிடம் நண்பா! நீ ஒவ்வொரு நாள் காலையிலும் விநாயகரை வணங்குகிறாய். நானோ என் நாயுடன் உடற்பயிற்சி செய்கிறேன். உனக்கு விநாயகர் சாமி என்றால் எனக்கு இந்த நாய் தான் சாமி. ஆகவே இந்த இரண்டு சாமிகளுக்கும் ஒரு போட்டி வைத்தால் இந்த இரண்டில் எது ஜெயிக்கிறதோ அது தான் இனி நம் இருவருக்கும் சாமி! ஏனெனில் சக்தி வாய்ந்த சாமி நிச்சயம் ஜெயிக்கும் அல்லவா!" என்றான். அதற்கு நண்பனும் " சரி நண்பா! உன் நிபந்தனைக்கு நானும் ஒப்புக்கொள்கிறேன். என்ன போட்டி வைக்கலாம் " என்று கேட்டான். உடனே நாத்திகன் கிண்டலாக " நண்பா ! அதோ தூரத்தில் தெரியும் கடலில் இரண்டு சாமிகளையும் வீசுவோம். சக்தி உள்ள சாமி நிச்சயம் கரைக்கு வரும்" என்றான். அதற்கு நண்பன் " இந்த சோதனைக்கு அவ்வளவு தூரம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு நம் வீட்டிலேயே சோதித்து பார்த்து விடலாம்" என்றான். நாத்திகனும் குழப்பமாக " இங்கு என்ன சோதனை வைக்க முடியும் " என்று வினவினான். உடனே நண்பன்" இரண்டு சாமிகளையும் கொண்டு வந்து ஓர் இடத்தில் வைத்து முதலில் என் சாமியை கொண்டு உன் சாமியை பத்து முறை அடிக்கிறேன் பின்பு உன் சாமியை கொண்டு என் சாமியை பத்து முறை அடி பின்பு பார் சக்தி உள்ள சாமிக்கு எதுவும் ஆகாது" என்றான். நாயை தூக்கி சிலை மேல் அடித்தாலும் சிலையை தூக்கி நாய் மேல் அடித்தாலும் பாதிப்பு என்னவோ நாய்க்கு மட்டும் தான் என்பதை புரிந்து கொண்ட நாத்திகன் அதிலிருந்து தன் நண்பனுடன் வாதம் செய்வதை விட்டு விட்டான்.

கருத்துகள் இல்லை: