பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

thennaliraman kathaikal

தென்னாலிரமனும் திருடர்களும்

ஒரு முறை தென்னாலிராமன் உடல்நலம் இல்லாமல் வீட்டில் படுத்து இருந்தான் . அப்போது அவன் தோட்டம் தண்ணீர் விடாமல் வாடிக்கிடந்தது .அன்று இரவு அவன் வீட்டிற்கு திருடர்கள் வந்தனர் .ராமன் உடல் நலக்குறைவால் உறக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்தான் .அவன் உறங்கும் வரை காத்திருக்கலாம் என்று திருடர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஒளிந்து கொண்டனர் .ராமன் இதனை கவனித்து விட்டான் .உடனே ஒன்றும் தெரியாதது போல் தன் மனைவிடம் சத்தமாக "இப்போது நாட்டில் திருடர்கள் தொல்லை அதிகமாக உள்ளது .அதனால் உன்னிடம் உள்ள நகைகள் மற்றும் வீட்டில் உள்ள விலைமதிக்க முடியாத பொருட்களையும் கொண்டுவா  அதனை இந்த பெட்டியில் வைத்து நம் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் போட்டு விடலாம் .அப்போது தான் பாதுகாப்பு "என்றான் .உடனே திருடர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . வந்தவேளை மிகவும் எளிதாக முடிந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தனர் .ராமன் பெட்டியில் செங்கற்களை அடுக்கி அதனை அவனும் அவன் மனைவியும் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றில் போட்டனர் .பின்பு ராமன் சத்தமாக மனைவியிடம் "இனி நமக்கு கவலை இல்லை நிம்மதியாக திருடர் தொல்லை இன்றி இருக்கலாம் " என்று கூறினான் .உடனே இருவரும் வீட்டிற்குள் சென்று உறங்குவதைப்போலே நடித்தனர் .சிறிது நேரம் கழித்து திருடர்கள் அனைவரும் தோட்டத்திற்கு சென்று கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வாளியில் இறைத்து வாய்க்காலில் வூற்றினர்கள் .அந்தநேரம் ராமன் பின்புறமாக தோட்டத்திற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினான் .பொழுது விடிய ஆரம்பித்தது உடனே ராமன் சத்தமாக "போதும் நீங்கள் இறைத்த நீரினால் என் தோட்டம் முழுவதும் பாய்ச்சி விட்டேன் மிகவும் நன்றி " என்றான் .சத்தத்தை கேட்டு திருடர்கள் ஓடிவிட்டனர் .ராமனும் நிம்மதியாக வீட்டிற்குள் வந்தான் .

கருத்துகள் இல்லை: