பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

bakthi kataikal

யார் சிறந்த பக்தர்

ஒரு நேரம் நாரதருக்கு சதா சர்வ காலமும் நாராயணன் நாமத்தையே உச்சரிக்கும் தன்னை விட சிறந்த பக்தன் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணத்துடன் பகவனை பார்த்து "பகவனே இந்த லோகத்தில் மிகச்சிறந்த நாராயண பக்தன் யார் "என்று கேட்டார் .அதற்கு பகவான் புன்னகையுடன் "நாரதா! பூலோகத்தில் முனியன் என்ற பக்தன் உறையூரில் வசிக்கிறான் அவனே என் மிகச்சிறந்த பக்தன் " என்றார் .உடனே நாரதர் அதிர்ச்சியுடன் "பகவனே நான் சதா சர்வகாலமாய் உங்கள் நாமத்தையே பூஜிக்கிறேன் அப்படி இருக்க என்னை விட அந்த முனியனை சிறந்த பக்தன் என்று கூறுகிறீர்களே " என்றார் .அதற்கு பகவான் "நாரதா !
இன்று ஒருநாள் காலைமுதல் மாலை வரை அந்த முனியனை கண்காணித்து வா பிறகு அவன் பக்தி உனக்கு புரியும் "என்றார் .அதற்கு நாரதரும் சம்மதித்து பூலோகம் வந்தார் .பின்பு முனியனின் வீட்டில் ஓர்மூலையில் ஒளிந்துகொண்டு கண்காணிக்க தொடங்கினார் .பொழுது புலர்ந்தது . அதிகாலையில் முனியன் எழுந்தவுடன் பகவானை நினைத்து "நாராயணா !இன்றைய பொழுது அனைவருக்கும் நல்ல பொழுதாக அமைய வேண்டும் .அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும் " என்று வணங்கினான் .பின்பு வழக்கம் போல் தனது கடமைகளை செய்ய ஆரம்பித்தான் .மாலை சூரியன் மறைய ஆரம்பித்தான் .இரவு வேலையும் வந்தது . வழக்கம் போல் தன் இரவு உணவை முடித்து விட்டு படுக்கைக்கு செல்லும் முன்பாக பகவானை நினைத்து  "நாராயணா !எங்கள் அனைவரையும் நீதான் காக்க வேண்டும் " என்று வணங்கிவிட்டு உறங்க ஆரம்பித்தான் .இதை பார்த்த நாரதருக்கு சிரிப்புதான் வந்தது .அவர் நேராக பகவானிடம் வந்து "பகவானே !இவனைப்போயா சிறந்த பக்தன் என்றீர்கள் !காலையில் ஒரு முறை மாலையில் ஒருமுறை மட்டுமே உங்களை நினைக்கிறான்  ஆனால் நானோ சதா சர்வகாலமும் உங்கள் சிந்தனையிலேயே காலத்தை கழிக்கிறேன் அப்படிப்பார்த்தால் நானல்லவா உங்கள் சிறந்த பக்தன் "என்றார் . அதற்கு பகவான் முழுவதும் நிரம்பியுள்ள ஒரு எண்ணெய் கிண்ணத்தை நாரதரிடம் கொடுத்து " நாரதா! இந்த கிண்ணத்தில் உள்ள எண்ணெய் ஒரு துளி கூட கீழே சிந்திவிடாமல் இந்த உலகத்தை சுற்றிவா " என்றார். உடனே நாரதரும் கிண்ணத்தை தன் உள்ளங்கையில் ஏந்தியபடி உலகத்தை சுற்றி வந்தார் . பின்பு பகவானிடம் "பகவானே ! பார்த்தீர்களா! ஒரு துளி கூட சிந்தவில்லை " என்றார். அப்போது பகவான் " நாரதா! இந்த எண்ணெய் கிண்ணத்தை கொண்டு இந்த உலகத்தை சுற்றிய நேரத்தில் எத்தனை முறை என்னை நினைத்தாய் !" என்றார். அதற்கு நாரதர் "பகவானே என் சிந்தனை முழுவதும் அந்த எண்ணெய் சிந்திவிடக்கூடாது என்பதில் மட்டும் தான் இருந்தது அப்படி இருக்க உங்களை என்னால் நினைக்க முடியவில்லை " என்றார் . உடனே பகவான் சிரித்துக்கொண்டே " நாரதா ! உனக்கு ஒரு சிறு வேலை தான் கொடுத்தேன் . ஆனால் என்னையே நீ மறந்து விட்டாய். ஆனால் முனியனோ எவ்வளவோ கடமைகளுக்கு மத்தியில் என்னை இருமுறை நினைக்கிறான் . எனவே தான் அவனை என் சிறந்த பக்தன் என்று கூறினேன் " என்றார். நாரதரும் பகவானை வணங்கி" என் கர்வம் அழிந்துவிட்டது என்னை மன்னித்து விடுங்கள் " என்றார் .

bakthi kataikal

சிறந்த கொடையாளி!

ஒருமுறை பாண்டவர்கள் சுற்றி அமர்ந்து இருக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் நடுவில் அமர்ந்திருந்தார் .
அப்போது அர்ஜுனன் கண்ணனை பார்த்து "கிருஷ்ணா இந்த உலகிலேயே மிகச்சிறந்த கொடையாளி யார் " என்று கேட்டான் .உடனே கண்ணன் "அர்ஜுனா! உண்மையை சொன்னால் கர்ணனை விட சிறந்த கொடையாளி யாரும் கிடையாது "என்றார் .உடனே அர்ஜுனன் கோபமாக "கண்ணா ! நானும் என் சகோதரர்களும் நிறைய தான தர்மங்கள் செய்திருக்கிறோம் அப்படி இருக்க கர்ணன் மட்டும் என்ன பெரிதாக செய்து விட்டான் " என்றான் .உடனே கண்ணன் சிரித்துக்கொண்டே "அர்ஜுனா இப்போது உனக்கு ஒரு தங்க மலையும்,ஒரு வெள்ளி மலையும் கொடுக்கிறேன் இன்று காலையிலிருந்து மாலை சூரியன் மறைவதற்குள் முடிந்தால் முழுவதையும் தானம் செய்துவிடு" என்றார் .உடனே கண்ணன் இரண்டு மலைகளையும் உருவாக்கினார் . பின்பு அர்ஜுனனை பார்த்து "உன் தானத்தை ஆரம்பி " என்றார் . அர்ஜுனன் ஒரு கோடரியை வைத்து மலைகளை வெட்டி தானம் செய்ய ஆரம்பித்தான் .மாலை வரை அவன் வெட்ட வெட்ட மலைகள் வளர்ந்து கொண்டே இருந்தன .மாலையில் கண்ணன் வந்து அர்ஜுனனை பார்த்து சிரித்துக்கொண்டே "என்ன அர்ஜுனா இன்று மாலை வரை எவ்வளவு தானம் செய்தாய் " என்று கேட்டான் . அதற்கு அர்ஜுனன் "கண்ணா அந்த கர்ணன் கூட என் அளவிற்கு தானம் செய்ய முடியாது அந்த அளவிற்கு தானம் செய்துவிட்டேன் என்றான் .உடனே கண்ணன் கர்ணனை வரவழைத்து அதே போல் இரண்டு மலைகளை உருவாக்கினான் .பின்பு கர்ணனை பார்த்து "கர்ணா !இந்த தங்க மலையும் வெள்ளி மலையும் உனக்கு கொடுக்கிறேன் இதனை இன்று மாலைக்குள் தானம் செய்துவிடு "என்றான் .உடனே கர்ணன் அந்தவழியாக வந்த இருவரை அழைத்து ஒருவருக்கு தங்க மலையையும் ,ஒருவருக்கு வெள்ளி மலையையும் தானம் செய்தான் .உடனே கண்ணன் அர்ஜுனனை பார்த்து "பார்த்திபா பார்த்தாயா உனக்கு நான் இலவசமாக கொடுத்து தானம் செய்ய சொன்னேன் ஆனாலும் உனக்கு அந்த மலையை முழுவதுமாய் கொடுக்க மனம் இல்லை . அதனை வெட்டி சிறு சிறு துண்டுகளாக கொடுத்தாய்
ஆனால் கர்ணனை பார்த்தாயா அதனால் தான் கர்ணன் சிறந்த கொடையாளி என்று கூறினேன் " என்றார் .அர்ஜுனனும் அதனை ஆமோதித்தான் .

thennaliraman kathaikal

தென்னாலிரமனும் திருடர்களும்

ஒரு முறை தென்னாலிராமன் உடல்நலம் இல்லாமல் வீட்டில் படுத்து இருந்தான் . அப்போது அவன் தோட்டம் தண்ணீர் விடாமல் வாடிக்கிடந்தது .அன்று இரவு அவன் வீட்டிற்கு திருடர்கள் வந்தனர் .ராமன் உடல் நலக்குறைவால் உறக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்தான் .அவன் உறங்கும் வரை காத்திருக்கலாம் என்று திருடர்கள் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் ஒளிந்து கொண்டனர் .ராமன் இதனை கவனித்து விட்டான் .உடனே ஒன்றும் தெரியாதது போல் தன் மனைவிடம் சத்தமாக "இப்போது நாட்டில் திருடர்கள் தொல்லை அதிகமாக உள்ளது .அதனால் உன்னிடம் உள்ள நகைகள் மற்றும் வீட்டில் உள்ள விலைமதிக்க முடியாத பொருட்களையும் கொண்டுவா  அதனை இந்த பெட்டியில் வைத்து நம் வீட்டு தோட்டத்தில் உள்ள கிணற்றில் போட்டு விடலாம் .அப்போது தான் பாதுகாப்பு "என்றான் .உடனே திருடர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது . வந்தவேளை மிகவும் எளிதாக முடிந்துவிட்டதாக எண்ணி மகிழ்ந்தனர் .ராமன் பெட்டியில் செங்கற்களை அடுக்கி அதனை அவனும் அவன் மனைவியும் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றில் போட்டனர் .பின்பு ராமன் சத்தமாக மனைவியிடம் "இனி நமக்கு கவலை இல்லை நிம்மதியாக திருடர் தொல்லை இன்றி இருக்கலாம் " என்று கூறினான் .உடனே இருவரும் வீட்டிற்குள் சென்று உறங்குவதைப்போலே நடித்தனர் .சிறிது நேரம் கழித்து திருடர்கள் அனைவரும் தோட்டத்திற்கு சென்று கிணற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வாளியில் இறைத்து வாய்க்காலில் வூற்றினர்கள் .அந்தநேரம் ராமன் பின்புறமாக தோட்டத்திற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சினான் .பொழுது விடிய ஆரம்பித்தது உடனே ராமன் சத்தமாக "போதும் நீங்கள் இறைத்த நீரினால் என் தோட்டம் முழுவதும் பாய்ச்சி விட்டேன் மிகவும் நன்றி " என்றான் .சத்தத்தை கேட்டு திருடர்கள் ஓடிவிட்டனர் .ராமனும் நிம்மதியாக வீட்டிற்குள் வந்தான் .

thennaliraman kathaikal

விகடகவி

தென்னாலிராமனின் பால்ய வயதில் மிகவும் வறுமையில் வாடினான் . ஒருமுறை பசி மயக்கத்தில் அருகில் உள்ள காளி கோவிலில் உறங்கிவிட்டான் . நள்ளிரவு வேளையில் காளிதேவி மிக பயங்கரமான தோற்றத்தில் காட்சியளித்தாள்.அப்போது திடீரென விழித்த தென்னாலி காளிதேவி பத்து தலையுடன் பயங்கரமாக தன் அருகில் நிற்பதை கண்டான் .உடனே காளிதேவியின் முன்னால் சென்று  மேலும் கீழும் பார்த்தான் . உடனே விழுந்து விழுந்து சிரித்தான் .உடனே காளிதேவி கோபத்துடன் "ராமா எதற்காக இப்படி சிரிக்கிறாய் " என்று கேட்டாள். அதற்க்கு ராமன் தாயே எனக்கு ஒரு தலை மட்டும் தான் உள்ளது .ஆனால் எனக்கு ஜலதோஷம் பிடித்தால் என் இரண்டு கைகளும் போதவில்லை அதனை துடைக்க ,அதுபோல் உனக்கு ஜலதோஷம் பிடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன் அதனால்   எனக்கு சிரிப்பு வந்துவிட்டது என்றான் . உடனே தேவியும் சிரித்துவிட்டாள் . உடனே "ராமா நீ விகடகவி என்ற பெயருடன் சிறப்போடு வாழ்வாய்" என்று ஆசி கூறி மறைந்தாள்.

mulla kathaikal

முல்லா கதைகள்

ஒருமுறை மிகப்பெரிய போர் நடந்தது .அந்தப்போரில் முல்லாவின் நாடு வெற்றி கொண்டது .அந்தப்போரில் நடந்த சம்பவங்களை பற்றி அரச சபையில் விவாதம் செய்தனர் .ஒவ்வொருவராக தங்களது வீர பராக்கிரம செயலை பற்றி மன்னரிடம்  சொன்னார்கள் .முல்லா வின் முறை வந்தது உடனே முல்லா எழுந்து "பாதுஷா அவர்களே நான் எதிரி படை வீரர்கள் நான்குபேரின் கால்களை வெட்டினேன் " என்றார் . உடனே மன்னர் முல்லாவை நோக்கி " அவர்கள் தலையை வெட்டாமல் ஏன் கால்களை வெட்டினீர்கள் "என்று கேட்டார் . அதற்கு முல்லா " எனக்கு தலையை வெட்ட ஆசைதான் ஆனால் அதற்கு முன்னால் யாரோ அவர்களின் தலையை வெட்டிவிட்டார்கள் " என்றார் வருத்தத்தோடு .

mulla kathaikal

முல்லா கதைகள்

ஒரு முறை முல்லா உயரமான ஏணியில் ஏறி வீட்டிற்கு வண்ணம் பூசிக்கொண்டிருந்தார் . திடீரென கால் தவறி "தடால் "என்ற சத்தத்துடன் கீழே விழுந்தார் .அந்த சத்தத்தை கேட்ட அவர் மனைவி "அங்கு என்ன சத்தம் "என்று கேட்டாள்.அதற்கு முல்லா "என் சட்டை உயரத்திலிருந்து கீழே விழுந்துவிட்டது " என்றார் . அதற்கு மனைவி " சட்டை விழுந்ததா இவ்வளவு பெரிய சத்தம் " என்றாள்.அதற்கு முல்லா " விழுந்த சட்டைக்குள் நானல்லவா இருந்தேன் " என்று சிரித்தபடி கூறினார். 

mulla kathaikal

முல்லா கதைகள்

முல்லா ஒருமுறை கல்யாணத்துக்கு போயிருந்தார் .பழைய அனுபவம் காரணமாக ,செருப்பை எடுத்து கோட்டின் உள் பையில் வைத்துக்கொண்டார் .இதை கவனித்த கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் முல்லாவை பார்த்து பையில் என்ன புத்தகம் வைத்திருக்கிறிர்களா என்று கேட்டார் . அதற்கு முல்லாவும் ஆம் என்று தலை அசைத்தார் .அவரும் விடாமல் புத்தகத்தின் தலைப்பு என்னவென்று கேட்டார் . முல்லா புன்னகையுடன் அதன் தலைப்பு " முன்னெச்சரிக்கை " என்றார் .

en sinthanaiyil ennaval

என் சிந்தனையில் என்னவள் !

அதிகாலை கனவில் .....
நீ கொடுத்த முத்தத்தை .....
கனவில் கலைத்துச் சென்ற......!
அந்த பறவைகளின் சத்தத்தை மட்டுமே !
வெறுக்கிறேன் ...!?
பறவைகளை அல்ல......!!

vinmeenkal

விண்மீன்கள்

வானப்பெண்ணின் ....
முகத்தில் தான் ....!
எத்தனை பருக்கள் ....!!!?

sengodi

செங்கொடி 

இவளால் என் தமிழ் மண் ...
பெருமை பெற்றது ..!
மூவுயிரை காக்க தன்னுயிரை ...
இழந்தவளே..!
உன்னை இழந்தது எங்கள் கண்ணை ...
 இழந்தது போலே ....
 இன்று மட்டும் என்
தலைவன் இருந்திருந்தால் ....!?
கலங்காத அவர் கண்களும் ...
கலங்கி இருக்கும் !!
அன்பு சகோதரியே !!!
இது நீ செய்த தியாகம் மட்டும்...
இல்லை ..!
எங்கள் மனதில் ஏற்றிவைத்த ...
தமிழ் உணர்வு !!!
உறங்கும் என் தமிழ் இனமே !
விழித்தெழு ...!?
என் தமிழ்த்தாய் தனது ...
மழலை களை நெருப்பிலே ...
இழந்துகொண்டிருக்கிறாள்!!!???