பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

unmai anbu

உண்மை அன்பு!!!

பெருமானார் நபிகள் நாயகத்தின் அன்பு மகள் பாத்திமாவுக்கு இரண்டு மகன்கள். அவர்களில் மூத்தவர் ஹசன் ,இளையவர் உசேன் இவர்கள் இருவரும் ஒருமுறை ஏதோ மனத்தாங்கலில் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்வதையே நிறுத்தி விட்டனர் . அன்னை பாத்திமா இதைக்கண்டு மிகவும் வருந்தினார் . இருவரையும் சமாதானப் படுத்தி பேச வைக்க முயற்சி செய்தார். இருவரையும் அழைத்து " அன்பு மக்களே ! இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறவர்கள் மூன்று தினங்கள் ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருந்தால் , அது அவர்களில் ஒருவர் மற்றவரை கொலை செய்வதற்கு சமம் " என்று உங்கள் தாத்தா ( பெருமகனார் நபிகள் நாயகம் ) சொல்லி இருப்பது உங்களுக்கு நினைவில்லையா ! எனவே உங்கள் கோபதாபங்களை மறந்து உறவாடுங்கள்" என்று கனிவோடு கூறினார் . தாங்கள் தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்த சகோதரர்கள் பேசிவிடத்துடித்தனர். ஆனாலும் அங்கு மவுனமே நிலவியது . யார் முதலில் பேச்சை தொடங்குவது என்பது தான் தற்போதைய பிரச்சினை. " மூத்தவன் என்பதால் அண்ணனுக்கு கூடுதல் சுயகவுரவம் இருக்கும் ! எனவே தம்பி நீ முதலில் பேசத் தொடங்கலாமே! என்று அன்னை அடிஎடுத்துக்கொடுத்தார். அதற்கு தம்பி உசேன் " அம்மா ! நான் முதலில் பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை , ஆனால் என் தாத்தா பெருமகனார் நபிகள் நாயகம் அவர்கள் சொன்ன இன்னொரு கருத்தும் எனக்கு நினைவுக்கு வருகிறது. " பேசாமல் இருக்கும் இருவரில் எவர் முதலில் பேசத் தொடங்குகிறார்களோ அவருக்கு தான் சொர்க்கத்தின் வாசல் முதலில் திறக்கும் என்று ஓரிடத்தில் சொல்லி இருக்கிறாரே! அதனால் அந்த பாக்கியம் என் அன்பு அண்ணனுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் பேசாமல் இருக்கிறேன் " என்றார். இதைக்கண்ட அண்ணன் கண்ணீர் மல்க " தம்பி ! என்று பாசத்துடன் அணைத்துக்கொண்டார். தம்பியும் ஆனந்த கண்ணீருடன் அணைத்துக்கொண்டார். அன்னையும் தன் பிள்ளைகளின் சகோதர பாசத்தைக் கண்டு நெகிழ்ந்து போனார்.