பக்கங்கள்

home

  • kathaikal
  • kavithaikal
  • vinothamana padangal

bakthi kataikal

யார் சிறந்த பக்தர்

ஒரு நேரம் நாரதருக்கு சதா சர்வ காலமும் நாராயணன் நாமத்தையே உச்சரிக்கும் தன்னை விட சிறந்த பக்தன் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணத்துடன் பகவனை பார்த்து "பகவனே இந்த லோகத்தில் மிகச்சிறந்த நாராயண பக்தன் யார் "என்று கேட்டார் .அதற்கு பகவான் புன்னகையுடன் "நாரதா! பூலோகத்தில் முனியன் என்ற பக்தன் உறையூரில் வசிக்கிறான் அவனே என் மிகச்சிறந்த பக்தன் " என்றார் .உடனே நாரதர் அதிர்ச்சியுடன் "பகவனே நான் சதா சர்வகாலமாய் உங்கள் நாமத்தையே பூஜிக்கிறேன் அப்படி இருக்க என்னை விட அந்த முனியனை சிறந்த பக்தன் என்று கூறுகிறீர்களே " என்றார் .அதற்கு பகவான் "நாரதா !
இன்று ஒருநாள் காலைமுதல் மாலை வரை அந்த முனியனை கண்காணித்து வா பிறகு அவன் பக்தி உனக்கு புரியும் "என்றார் .அதற்கு நாரதரும் சம்மதித்து பூலோகம் வந்தார் .பின்பு முனியனின் வீட்டில் ஓர்மூலையில் ஒளிந்துகொண்டு கண்காணிக்க தொடங்கினார் .பொழுது புலர்ந்தது . அதிகாலையில் முனியன் எழுந்தவுடன் பகவானை நினைத்து "நாராயணா !இன்றைய பொழுது அனைவருக்கும் நல்ல பொழுதாக அமைய வேண்டும் .அதற்கு நீதான் அருள் புரிய வேண்டும் " என்று வணங்கினான் .பின்பு வழக்கம் போல் தனது கடமைகளை செய்ய ஆரம்பித்தான் .மாலை சூரியன் மறைய ஆரம்பித்தான் .இரவு வேலையும் வந்தது . வழக்கம் போல் தன் இரவு உணவை முடித்து விட்டு படுக்கைக்கு செல்லும் முன்பாக பகவானை நினைத்து  "நாராயணா !எங்கள் அனைவரையும் நீதான் காக்க வேண்டும் " என்று வணங்கிவிட்டு உறங்க ஆரம்பித்தான் .இதை பார்த்த நாரதருக்கு சிரிப்புதான் வந்தது .அவர் நேராக பகவானிடம் வந்து "பகவானே !இவனைப்போயா சிறந்த பக்தன் என்றீர்கள் !காலையில் ஒரு முறை மாலையில் ஒருமுறை மட்டுமே உங்களை நினைக்கிறான்  ஆனால் நானோ சதா சர்வகாலமும் உங்கள் சிந்தனையிலேயே காலத்தை கழிக்கிறேன் அப்படிப்பார்த்தால் நானல்லவா உங்கள் சிறந்த பக்தன் "என்றார் . அதற்கு பகவான் முழுவதும் நிரம்பியுள்ள ஒரு எண்ணெய் கிண்ணத்தை நாரதரிடம் கொடுத்து " நாரதா! இந்த கிண்ணத்தில் உள்ள எண்ணெய் ஒரு துளி கூட கீழே சிந்திவிடாமல் இந்த உலகத்தை சுற்றிவா " என்றார். உடனே நாரதரும் கிண்ணத்தை தன் உள்ளங்கையில் ஏந்தியபடி உலகத்தை சுற்றி வந்தார் . பின்பு பகவானிடம் "பகவானே ! பார்த்தீர்களா! ஒரு துளி கூட சிந்தவில்லை " என்றார். அப்போது பகவான் " நாரதா! இந்த எண்ணெய் கிண்ணத்தை கொண்டு இந்த உலகத்தை சுற்றிய நேரத்தில் எத்தனை முறை என்னை நினைத்தாய் !" என்றார். அதற்கு நாரதர் "பகவானே என் சிந்தனை முழுவதும் அந்த எண்ணெய் சிந்திவிடக்கூடாது என்பதில் மட்டும் தான் இருந்தது அப்படி இருக்க உங்களை என்னால் நினைக்க முடியவில்லை " என்றார் . உடனே பகவான் சிரித்துக்கொண்டே " நாரதா ! உனக்கு ஒரு சிறு வேலை தான் கொடுத்தேன் . ஆனால் என்னையே நீ மறந்து விட்டாய். ஆனால் முனியனோ எவ்வளவோ கடமைகளுக்கு மத்தியில் என்னை இருமுறை நினைக்கிறான் . எனவே தான் அவனை என் சிறந்த பக்தன் என்று கூறினேன் " என்றார். நாரதரும் பகவானை வணங்கி" என் கர்வம் அழிந்துவிட்டது என்னை மன்னித்து விடுங்கள் " என்றார் .

1 கருத்து:

karpahapriyan சொன்னது…

karvam evvalavu periya manitharaiyum thaaltthivdm